TNPSC Thervupettagam

நிரந்தர நடுவர் நீதிமன்றம் (PCA) மற்றும் சிந்து நதிநீர் ஒப்பந்தம்

September 6 , 2026 7 days 69 0
  • சிந்து நதிநீர் ஒப்பந்தம் (IWT), 1960-இன் கீழ் இந்திய நீர்மின் திட்டங்களில் அனுமதிக்கப் பட்ட அதிகபட்ச நீர் தேக்கும் திறன் (Pondage) குறித்த நிரந்தர நடுவர் நீதிமன்றத்தின் (PCA) 2026 ஆம் ஆண்டு மே மாத தீர்ப்பை இந்தியா நிராகரித்துள்ளது.
  • ஜம்மு மற்றும் காஷ்மீரில் உள்ள இந்தியாவின் கிஷன்கங்கா (330 மெகாவாட்) மற்றும் ராட்டில் (850 மெகாவாட்) ஓடும்-நதி நீர்மின் திட்டங்கள் தொடர்பாக இந்த சர்ச்சை எழுந்துள்ளது.
  • பாகிஸ்தானுக்குள் நீர் செல்வதை அவை பாதிக்கக்கூடும் என்று கூறி, நீர் தேக்கம் மற்றும் மதகு வடிவமைப்புகளுக்கு பாகிஸ்தான் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது.
  • பாகிஸ்தான் நடுவர் நீதிமன்றம் மற்றும் நடுநிலை நிபுணர் வழிமுறைகளை இணையாகப் பின்பற்றியதால் இது சட்டவிரோதமாக அமைக்கப்பட்டது என்று கூறி, நடுவர் நீதிமன்றச் செயல்முறையை இந்தியா நிராகரித்துள்ளது.
  • உலக வங்கியின் வசதியாளர் மற்றும் கையொப்பமிட்டவராகவும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 1960 ஆம் ஆண்டில் சிந்து நதிநீர் ஒப்பந்தம் கையெழுத்தானது.
  • ராவி, பியாஸ் மற்றும் சட்லெஜ் நதிகள் இந்தியாவிற்கும், சிந்து, ஜீலம் மற்றும் சீனாப் நதிகள் பெருமளவில் பாகிஸ்தானுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளன.
  • ஒப்பந்தத்தின் தொழில்நுட்ப நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஓடும்-நதி நீர்மின் உற்பத்தி உட்பட மேற்கு நதிகளின் மட்டுப்படுத்தப்பட்ட பயன்பாட்டிற்கு இந்தியா அனுமதிக்கப் படுகிறது.
  • சிந்து நதிநீர் ஒப்பந்தமானது நிரந்தர சிந்து ஆணையம், நடுநிலை நிபுணர் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகிய மூன்று கட்ட சர்ச்சை தீர்வு பொறிமுறையை வழங்குகிறது.
  • 2025 ஆம் ஆண்டு பஹல்காம் பயங்கரவாதத் தாக்குதலைத் தொடர்ந்து சிந்து நதிநீர் ஒப்பந்தம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது, மேலும் நடுவர் நீதிமன்ற நடவடிக்கைகளில் இந்தியா பங்கேற்கவில்லை.
  • சர்வதேச மோதல்களின் அமைதியான தீர்வுக்கான 1899 ஆம் ஆண்டு ஒப்பந்தத்தின் கீழ், நடுவர் மன்றம் மற்றும் சர்வதேச மோதல்களை அமைதியான முறையில் தீர்ப்பதற்கு வசதியாக 1899 ஆம் ஆண்டில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் (PCA) நிறுவப் பட்டது.
  • PCA என்பது ஒரு சுயாதீனமான அரசுகளுக்கிடையேயான அமைப்பாகும், இது ஐக்கிய நாடுகள் சபையின் (UN) நிறுவனம் அல்ல, ஆனால் இது ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் நிரந்தரப் பார்வையாளர் அந்தஸ்தைக் கொண்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்