TNPSC Thervupettagam

நிர்வாகிகள் குழு (CoA - Committee of Administrators) முடிவுக்கு வருகிறது

October 25 , 2019 2095 days 628 0
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதான நிர்வாகிகள் குழுவின்  கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
  • இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நடத்துவதற்கும், நீதிபதி ஆர்.எம்.லோதா குழு பரிந்துரைத்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கும் நிர்வாகிகள் குழுவானது 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அமல்படுத்தப்பட்டது.
  • நிர்வாகிகள் குழுவானது முன்னாள் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர்  வினோத் ராய் தலைமையில் இருந்தது.
  • புதிய தேர்தல்  நடத்தப்படும் வரை அந்த வாரியத்தின் நிர்வாகக் கடமைகளை கவனிக்க அவர் இங்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
  • இதில் ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயே மற்றும் டயானா எடுல்ஜி ஆகியோரும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்