நிர்வாகிகள் குழு (CoA - Committee of Administrators) முடிவுக்கு வருகிறது
October 25 , 2019 2111 days 640 0
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீதான நிர்வாகிகள் குழுவின் கண்காணிப்பை முடிவுக்குக் கொண்டு வருவதாக உச்ச நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளது.
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தை நடத்துவதற்கும், நீதிபதி ஆர்.எம்.லோதா குழு பரிந்துரைத்த சீர்திருத்தங்களை அமல்படுத்துவதற்கும் நிர்வாகிகள் குழுவானது 2017 ஆம் ஆண்டில் உச்ச நீதிமன்றத்தால் அமல்படுத்தப்பட்டது.
நிர்வாகிகள் குழுவானது முன்னாள் இந்தியத் தலைமை கணக்குத் தணிக்கையாளர் வினோத் ராய் தலைமையில் இருந்தது.
புதிய தேர்தல் நடத்தப்படும் வரை அந்த வாரியத்தின் நிர்வாகக் கடமைகளை கவனிக்க அவர் இங்கு நியமிக்கப் பட்டுள்ளார்.
இதில் ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயே மற்றும் டயானா எடுல்ஜி ஆகியோரும் அதன் உறுப்பினர்களாக உள்ளனர்.