TNPSC Thervupettagam

நிறக் குறியீடு மூலம் நாட்டைப் பிரித்தல்

April 18 , 2020 1947 days 723 0
  • கோவிட்  - 19 நோய்த் தொற்றின் மேலாண்மையைச் சிறப்பாகக் கையாளுவதற்கு உதவுவதற்காக நிறக் குறியீடு மூலம் நாட்டைப் பிரித்தலானது (சிவப்பு, ஆரஞ்சு, பச்சை) மத்திய சுகாதார மற்றும் குடும்ப நலத்துறையால் மேற்கொள்ளப் பட்டுள்ளது.
  • இது நாடு முழுவதும் உள்ள அனைத்து மாவட்டங்களையும் முக்கியமான பகுதிகள் (சிவப்பு மண்டலம்), நோய்த் தொற்று குறைவாக உள்ள பகுதிகள் (வெள்ளை / ஆரஞ்சு மண்டலம்) மற்றும்  பச்சை மண்டலம் என்றவாறு பிரிக்க முடிவு செய்துள்ளது. 
  • இது நாடு முழுவதிலும் 170 முக்கியமான மாவட்டங்களையும் (சிவப்பு மண்டலம்),  207 நோய்த் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்களையும் (வெள்ளை மண்டலம்) 353 மற்ற மாவட்டங்களையும் (பச்சை மண்டலம்) அடையாளம் கண்டுள்ளது.
  • அதிக எண்ணிக்கையிலான நோய்த் தொற்று பாதிப்புகள் அல்லது நோய்த் தொற்றின் அதிக வளர்ச்சி விகிதத்தைக் கொண்டுள்ள மாவட்டங்கள் முக்கியமான மாவட்டங்களாகக் குறிக்கப் பட்டுள்ளன. குறைந்த எண்ணிக்கையிலான பாதிப்புகளைக் கொண்டுள்ள மாவட்டங்கள் நோய்த் தொற்று குறைவான மாவட்டங்களாகக் குறிக்கப் பட்டுள்ளன. நோய் பாதிப்பு எதுவும் பதிவாகாத மாவட்டங்கள் பச்சை மண்டலங்களாகக் குறிக்கப் பட்டுள்ளன. 
  • சிவப்பு மண்டல மாவட்டங்கள் மிகப்பெரிய அளவில் நோய் பாதிப்புள்ள பகுதிகள் அல்லது குழுக்களாக நோய் பாதிப்புள்ள பகுதிகள் என்று மேலும் வகைப்படுத்தப் பட்டுள்ளன.
  • தமிழ்நாடு, தனது 27 மாவட்டங்களில் 22 நோய் பாதிப்பு மாவட்டங்களுடன் நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோய் பாதிப்பு உள்ள மாவட்டங்களைக் கொண்ட  மாநிலமாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளது.
  • இதைத் தொடர்ந்து மகராஷ்டிராவில் 14 மாவட்டங்களும் உத்திரப் பிரதேசத்தில் 13 மாவட்டங்களும் ராஜஸ்தானில் 12 மாவட்டங்களும் ஆந்திரப் பிரதேசத்தில் 11 மாவட்டங்களும் தில்லியில் 10 மாவட்டங்களும் அதிக பாதிப்புள்ள மாவட்டங்களைக்  கொண்ட மாநிலங்களாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • இந்த எண்ணிக்கையானது வாராந்திர அடிப்படையில் கொரானா வைரஸ் நோய்த் தொற்றின் புதிய பாதிப்புகளின் அடிப்படையில் குறையும் அல்லது அதிகரிக்கும்.
  • மத்திய சுகாதார நலத்துறை அமைச்சகமானது நோய் பாதிப்புகளின் இறுதி எண்ணிக்கை மற்றும் நோய் பாதிப்புகள் அதிகரிக்கும் வேகம் என்ற காரணிகளை  மாவட்டங்களை முக்கியமான மாவட்டங்களாக வகைப்படுத்த பயன்படுத்துகின்றது.
  • முக்கியமான நோய்த் தொற்றுள்ள மாவட்டங்கள் என்பவை (hotspots) அதிக எண்ணிக்கையிலான கோவிட் – 19 நோய்த் தொற்று பதிவாகியுள்ள மாவட்டங்கள் மற்றும் பதிவாகியுள்ள பாதிப்புகள் தினசரியாக அதிகரித்துக் கொண்டிருப்பதைக் குறிக்கின்றது.
  • நோய்த் தொற்று குறைவாக உள்ள மாவட்டங்கள் என்பவை அதிக எண்ணிக்கையிலான கோவிட் – 19 நோய்த் தொற்றுள்ள மாவட்டங்கள் மற்றும் புதிய பாதிப்புகள் எதுவும் பதிவாகாத மாவட்டங்களைக் குறிக்கின்றது.
  • பச்சை மண்டல மாவட்டங்கள் என்பவை மிகவும் குறைந்த அளவிலான அல்லது கோவிட் – 19 பாதிப்புகளற்ற மாவட்டங்களைக் குறிக்கின்றன.
  • சிவப்பு மண்டலத்தில் உள்ள மாவட்டத்தில் 14 நாட்களில் எந்தவொரு புதிய கோவிட் – 19 நோய்த் தொற்று பாதிப்பும் பதிவாகவில்லை எனில், அந்த மாவட்டம் அடுத்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாற்றப்படும். அடுத்த 28 நாட்களில் எந்தவொரு புதிய கோவிட் – 19 நோய்த் தொற்றும் அந்த மாவட்டத்தில் பதிவாகவில்லை எனில், அது பச்சை மண்டலத்திற்கு மாற்றப்படும்.
  • மாவட்டங்களை வகைப்படுத்துவதற்கான தொழில்நுட்ப வரையறை என்பது எந்தவொரு மாவட்டத்திலும் 6 நோய்ப் பாதிப்புகளுக்கு  மேல் பதிவாகியிருந்தால், அந்த மாவட்டம் முக்கியமான மாவட்டம் அல்லது சிவப்பு மண்டலமாக வகைப்படுத்தப் படும்.
  • 15 நோய்ப் பாதிப்புகளுக்கு மேலுள்ள எந்தவொரு மாவட்டமும் திடீர் நோய்ப் பெருக்கத்தைக் கண்டுள்ள மாவட்டமாக வகைப்படுத்தப்படும்.
  • முக்கியமாக நோய்த் தொற்றுள்ள மாவட்டங்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப் படுகின்றது.

 

முக்கியமான மாவட்டத்திற்கான தகுதி நிலைகள்
  • இந்தியாவில் 80%ற்கும் மேல் நோய்த் தொற்றைக் கொண்டுள்ள மாவட்டம் அல்லது
  • ஒவ்வொரு மாநிலத்திற்கும் 80% நோய்ப் பாதிப்புகளுக்குப் பங்கு வகிக்கும் மாவட்டங்கள் அல்லது
  • 4 நாட்களுக்கும் குறைவான நாட்களில் இரட்டிப்பு விகிதத்தில் நோய்த் தொற்று விகிதத்தைக் கொண்டுள்ள மாவட்டங்கள்.
  • பச்சை மண்டலம் : கடைசி 28 நாட்களில் எந்தவொரு புதிய நோய்த் தொற்றும் தோன்றாத மாவட்டங்கள்.
மண்டலங்களின் வறையறைகள்
  • நோய் பாதிப்புள்ள மண்டலம் அல்லது நோய் பாதிப்புள்ள குழுவைக் கொண்டுள்ள மண்டலம் என்பது நோய்க் கட்டுப்படுத்துதல் மண்டலத்தின் மையமாகக் குறிக்கப் படுகின்றது.    
  • தாங்கியிருப்பு அல்லது இடையக மண்டலம் (Buffer Zone) என்பது கடுமையான மற்றும் வீரியமிக்க சுவாசப் பிரச்சினை கொண்ட மக்கள் சோதிக்கப்பட்டு கண்காணிக்கப் படுவதைக் குறிக்கின்றது.
  • நோய்த் தொற்றின் உள்ளுர் பரவலைக் கண்டறிவதற்காகவும் அந்த பரவுதலிலிருந்து நோய்த் தொற்றைக் தடுப்பதற்காகவும் கட்டுப்படுத்தல் மண்டலமானது உருவாக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்