TNPSC Thervupettagam

நிறுவனங்கள் (திருத்த) மசோதா, 2020

September 27 , 2020 1783 days 667 0
  • இந்த மசோதாவானது நிறுவனங்கள் சட்டம், 2013 என்ற சட்டத்தைத் திருத்தக் கோருகின்றது.
  • இது தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தின் மீதான சுமையைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த மசோதாவானது சில பிரிவுகளைச் சேர்ந்த பொது நிறுவனங்களின் அயல்நாட்டு அதிகார வரம்புகளில் சில பிரிவுகளைச் சேர்ந்த பங்குகளைப் பட்டியலிடுவதற்கு மத்திய அரசிற்கு அதிகாரம் வழங்குகின்றது.
  • இந்த மசோதாவானது ரூ.50 இலட்சம் வரை சிஎஸ்ஆர் பொறுப்புடைமை (சமூக நிறுவனப் பொறுப்புடைமை) உள்ள நிறுவனங்களுக்கு சிஎஸ்ஆர் குழுக்களை அமைப்பதிலிருந்து ஒரு ஆண்டுக்கு விலக்கு அளித்துள்ளது.  
  • இந்த மசோதாவானது குற்றங்களில் 3 மாற்றங்களைச் செய்துள்ளது.
    • சில குற்றங்களுக்கான தண்டனையை நீக்கியுள்ளது.
    • சில குற்றங்களுக்கான சிறைத் தண்டனையை நீக்கியுள்ளது.
    • சில குற்றங்களில் செலுத்தப்பட வேண்டிய அபராதத் தொகையைக் குறைத்து உள்ளது.
  • மேலும் இது, அறநெறியில் தொழில் தொடங்குதல் மற்றும் நேர்மையான முறையில் தொழில் தொடங்குதலை ஊக்குவிக்கும் பல்வேறு குற்றங்களைக் குற்றமற்றதாக ஆக்கியுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்