திருமணம் செய்வதாக உண்மையான ஒரு வாக்குறுதி வழங்குவதன் அடிப்படையில் கருத்து ஒற்றுமையுடன் உடலுறவு மேற்கொள்ளப்பட்டு அந்த வாக்குறுதி நிறைவேற்றப் படாமல் இருந்தால் அது கற்பழிப்பு அல்ல என்று உச்ச நீதிமன்றம் கூறி உள்ளது.
உச்ச நீதிமன்றமானது 2016 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட ஒரு முதல் தகவல் அறிக்கையினை ரத்து செய்தது.
மேலும், இந்த வழக்கில் முதல் தகவல் அறிக்கையினைப் பதிவு செய்வது என்பது குற்றவியல் நடைமுறையை தவறாகப் பயன்படுத்துவதாகும் எனவும் உச்ச நீதிமன்றம் கூறியது.