நிலக்கரிச் சுரங்கங்களுக்கான நட்சத்திரக் குறியீட்டு விருதுகள் 2024–25
November 7 , 2026 12 days 101 0
2024–25 ஆம் நிதியாண்டில் நிலக்கரிச் சுரங்கங்களின் சிறப்பான செயல்பாட்டை அங்கீகரிக்கும் வகையில், நிலக்கரி அமைச்சகம் சத்தீஸ்கரின் ராய்ப்பூரில் வருடாந்திர நட்சத்திரக் குறியீட்டு விருதுகள் வழங்கும் விழாவை ஏற்பாடு செய்தது.
மொத்தம் 50 நிலக்கரிச் சுரங்கங்கள் ஐந்து நட்சத்திரக் குறியீடுகளைப் பெற்றுள்ளன, அவற்றில் 10 சுரங்கங்கள் 93%-க்கும் அதிகமான மதிப்பெண்களுடன் தங்களின் பிரிவுகளில் முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் இடங்களைப் பிடித்தன.
திறந்தவெளிச் சுரங்கப் பிரிவில் நார்தர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (NCL) நிறுவனம் மற்றும் NTPC நிறுவனம் முதல் பரிசையும், நிலத்தடிச் சுரங்கப் பிரிவில் சிங்கரேணி காலரீஸ் கம்பெனி லிமிடெட் (SCCL) நிறுவனம் முதல் பரிசையும் வென்றன.
கோல் இந்தியா துணை நிறுவனங்களில் அதிக எண்ணிக்கையிலான ஐந்து நட்சத்திரக் குறியீடு பெற்ற சுரங்கங்களைக் கொண்டதற்காக வெஸ்டர்ன் கோல்ஃபீல்ட்ஸ் லிமிடெட் (WCL) சிறப்புப் பாராட்டைப் பெற்றது.
நட்சத்திரக் குறியீட்டுத் திட்டமானது பாதுகாப்பு, சுற்றுச்சூழல் மேலாண்மை, அறிவியல் பூர்வமான சுரங்க நடைமுறைகள், உற்பத்தித்திறன் மற்றும் சமூக நலம் ஆகியவற்றின் அடிப்படையில் சுரங்கங்களை மதிப்பிடுகிறது.