TNPSC Thervupettagam

நிலக்கரி துறைக்கான CSR கட்டமைப்பு

September 14 , 2026 15 hrs 0 min 15 0
  • புது தில்லியில், நிலக்கரி அமைச்சகம் மற்றும் கோல் இந்தியா லிமிடெட் (CIL) ஆகியவை நிலக்கரி நிறுவனங்களுக்கான இந்தியாவின் முதல் துறை சார்ந்த விரிவான பெரு நிறுவன சமூகப் பொறுப்பு (CSR) கட்டமைப்பை வெளியிட்டன.
  • 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் கீழான சட்டப்பூர்வ CSR விதிகளுக்குப் பிறகு, இந்தியாவில் வெளியிடப்பட்ட முதல் துறை சார்ந்த CSR வழிகாட்டுதல் இது ஆகும்.
  • நிலக்கரிச் சுரங்கப் பகுதிகளில் நடைபெறும் CSR நடவடிக்கைகளை வெளிப்படை ஆனதாகவும், அளவிடக்கூடியதாகவும் மற்றும் முடிவுகளை அடிப்படையாகக் கொண்டதாகவும் மாற்றுவதற்காக இந்தியப் பெருநிறுவன விவகாரங்கள் நிறுவனம் (IICA) இதை வடிவமைத்துள்ளது.
  • 2013 ஆம் ஆண்டு நிறுவனங்கள் சட்டத்தின் 135வது பிரிவு, இந்தியாவில் உள்ள CSR விதிகளுக்குச் சட்ட அடிப்படையை வழங்குகிறது.
  • தலாசீமியா பால் சேவா யோஜனா திட்டத்தின் கீழ், CIL நிறுவனம் குழந்தைகளுக்கான 1,050க்கும் மேற்பட்ட எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளை முடித்துள்ளது. மேலும் 21 அங்கீகரிக்கப்பட்ட மருத்துவமனைகள் மூலம் ஒரு நோயாளிக்கு ₹10 லட்சம் வரை வழங்கியுள்ளது.
  • 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் CIL நிறுவனத்தின் நன்ஹா சா தில் (Nanha Sa Dil) முன்னெடுப்பானது, 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்து 1,500-க்கும் மேற்பட்ட இலவச சீரமைப்பு இருதய அறுவை சிகிச்சைகளைச் செய்துள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்