TNPSC Thervupettagam

நிலக்கரி மாசுபாடு

August 31 , 2025 6 days 43 0
  • "Regulating Coal Operations: Environmental and Social Impacts through the Lens of the National Green Tribunal" என்ற தலைப்பிலான அறிக்கையை விகல்பா என்ற இலாப நோக்கமற்ற அமைப்பு வெளியிட்டது.
  • 2022-23 ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின் உற்பத்தியில் நிலக்கரியின் பங்கு 73 சதவீதமாக இருந்தது.
  • இது 2031-32 ஆம் ஆண்டிற்குள் மின் உற்பத்தியில் இதன் பங்கு சுமார் 50 சதவீதமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
  • நிலக்கரிச் சுரங்கம் மற்றும் அனல் மின் நிலையங்கள் காற்று, நீர் மற்றும் ஒலி மாசுபாட்டையும் நிலங்களின் தரமிழப்பினையும் ஏற்படுத்துகின்றன.
  • நிலக்கரி காணப்படும் பகுதிகளில் நிலக்கரி போக்குவரத்திலிருந்து வெளிவரும் தூசி மாசுபாடு PM10 அளவை ஒரு கன மீட்டருக்கு 460 மைக்ரோகிராமாக அதிகரித்தது.
  • இது அனுமதிக்கப்பட்ட வரம்பை விட ஐந்து மடங்கு அதிகமாகும்.
  • தமிழ்நாட்டின் எண்ணூர் பகுதியில், ஆறுகள், கால்வாய்கள் மற்றும் வெள்ளப்பெருக்கு சமவெளிகளில் எரிசாம்பல் அடைப்பு ஏற்படுவதால், அங்கு நீர் தேங்கி மற்றும் வெள்ள அபாயத்தை ஏற்படுத்துகிறது.
  • எரி சாம்பலில் உள்ள நச்சுக் கூறுகள் சிலிகோசிஸ், புற்றுநோய் மற்றும் நரம்பியல் நோய்களின் அபாயத்தை அதிகரித்துள்ளன.
  • எண்ணூர் அனல் மின் நிலையத்திற்கு அருகில் காணப்படும் காட்மியம் மற்றும் ஈயம் போன்ற கன உலோகங்களின் மாசுபாடு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு அதிகப் புற்றுநோய் அபாயத்தை ஏற்படுத்தின.
  • எண்ணூரில் உள்ளவை உட்பட பல நிலக்கரி ஆலைகள், உமிழ்வுத் தரவைத் தவறாகப் பதிவு செய்து மாசுக் கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறியுள்ளன.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்