நிலக்கரி (Coking coal) மீதான புரிந்துணர்வு ஒப்பந்தம் – இந்தியா மற்றும் ரஷ்யா
July 17 , 2021 1489 days 538 0
இந்தியா மற்றும் ரஷ்யா இடையே நிலக்கரித் துறையில் ஒத்துழைப்பினை மேற் கொள்ளச் செய்வதற்கான ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை தனது ஒப்புதலை வழங்கியுள்ளது.
நிலக்கரியானது எஃகு உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
எஃகு அமைச்சகம் (இந்தியா) மற்றும் ஆற்றல் அமைச்சகம் (ரஷ்யா) ஆகியவற்றுக்கு இடையே இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எஃகு தொழில்துறையின் உள்ளீட்டுச் செலவினத்தைக் குறைப்பதன் மூலம் ஒட்டு மொத்த எஃகு தொழில்துறைக்கும் இந்த ஒப்பந்தம் பயனளிக்க உள்ளது.
இது எஃகுகளின் விலையைக் குறைத்து அத்துறையின் சம பங்கு மற்றும் உள்ளடக்கத்தையும் மேம்படுத்துகிறது.
நிலக்கரித் துறையில் ஒத்துழைப்பிற்கான ஒரு நிறுவன அளவிலான செயல்முறை ஒன்றையும் இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் வழங்கப்படும்.
நிலக்கரி
இது உலோக நிலக்கரி எனவும் அழைக்கப்படுகிறது.
இது நல்ல தரமான கற்கரியை தயாரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.
கற்கரி என்பது முதல் தர எஃகு உற்பத்திக்கான ஊது உலை (blast furnace) செயல்முறையில் பயன்படுத்தப்படும் ஒரு அத்தியாவசியமான எரிபொருள் மற்றும் வினைபடு (reactant) பொருளாகும்.