காமன்வெல்த் அமைப்பின் அனைத்து 54 உறுப்பினர்களும் அந்தந்த நாடுகளில் உள்ள ‘நிலங்களை’ வருங்காலச் சந்ததியினருக்கு தானாக முன்வந்து அர்ப்பணிக்க ஒப்புக் கொண்டுள்ளனர்.
ஐக்கிய நாடுகளின் சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்புக்கான தசாப்தத்திற்காக அமைக்கப் பட்ட உத்திக்கு ஏற்ற வகையில் இது மேற்கொள்ளப்பட்டது (2021-2030).
இது ஒரு பிணைப்பு சாராத ஒப்பந்தமாகும்.
இது உறுப்பினர் நாடுகள் காலநிலை மாற்றம், பல்லுயிர் இழப்பு மற்றும் நிலையான மேலாண்மை ஆகியவற்றுக்கு எதிராகச் செயல்படுகின்ற அதே சமயம், உலகளாவிய நில வளங்களைப் பாதுகாப்பதோடு நிலச் சீரழிவைத் தடுக்கச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது.
இது நிலம் மற்றும் முக்கிய சுற்றுச்சூழல் வளங்களைப் பாதுகாப்பதில் பழங்குடி மக்கள் மற்றும் உள்ளூர் சமூகங்களால் வழங்கப்படும் "முக்கியமான பாதுகாப்பினை" அங்கீகரிக்கிறது.