உத்தரகாண்டில் உள்ள ஜோஷிமத் என்ற சிறிய நகரத்தில் அமைந்துள்ள மொத்தம் 4,500 கட்டிடங்களில் 610 கட்டிடங்கள் விரிசல் அடைந்த நிலையில் உள்ளது.
அதிகாரிகள் இந்தப் பகுதியினை நிலச்சரிவு - நில அமிழ்தல் மண்டலமாக அறிவித்து உள்ளனர்.
இது நிலத்தடிப் பொருட்களின் அகற்றம் அல்லது நகர்வு காரணமாக பூமியின் மேற் பரப்பில் படிப்படியாக தாழ்வு அல்லது திடீரென கீழிறங்குதல் நிகழ்வு ஆகும்.
தண்ணீர், எண்ணெய், இயற்கை எரிவாயு, அல்லது கனிம வளங்கள் நிலத்தில் இருந்து, குழாய் மூலம், பாறைகளை உடைப்பதன் மூலம் அல்லது சுரங்க நடவடிக்கைகளால் வெளியேற்றப் படுவதால் பெரும்பாலும் நில அமிழ்தல் ஏற்படுகிறது.
1976 ஆம் ஆண்டு மிஸ்ரா குழுவின் அறிக்கையின்படி, ஜோஷிமத் ஒரு பிளவு தளத்தில் அமைந்துள்ளது.
ஜோஷிமத் ஒரு நிலச்சரிவு மிகுந்த அமைப்பு மீது (அதாவது ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு) அமைந்துள்ளது.
ஜோஷிமத் பத்ரிநாத் மற்றும் ஹேம்குண்ட் சாஹிப் செல்லும் பாதையில் அமைந்து உள்ளது.
இது அதிக ஆபத்துள்ள 'Zone-V' எனப்படும் நில அதிர்வு மண்டலத்தில் அமைந்துள்ளது.