நிலத்தடித் தண்ணீர்ப் பயன்பாடு குறித்த பஞ்சாப் கொள்கை
February 7 , 2023 908 days 456 0
பஞ்சாப் தண்ணீர் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (PWRDA) ஆனது 2023 ஆம் ஆண்டு பஞ்சாப் நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் மற்றும் பாதுகாப்பு வழி முறைகளை அறிவித்துள்ளது.
அம்மாநிலத்திலிருந்து நிலத்தடி நீரைப் பிரித்தெடுப்பதற்கான கட்டணத்திலிருந்து விலக்கு பெறாத அனைத்துப் பயனர்களுக்கும் பிப்ரவரி 01 முதல் பஞ்சாப் அரசு கட்டணம் விதிக்கத் தொடங்கியுள்ளது.
இருப்பினும், இந்தப் புதிய வழிகாட்டுதல்கள், வேளாண்மை, குடிநீர் மற்றும் வீட்டு தேவைகளுக்கான நிலத்தடி நீர்ப் பயன்பாடுகளை உள்ளடக்கவில்லை.
மாதத்திற்கு 300 கன மீட்டருக்கும் குறைவான அளவில் நிலத்தடி நீரைப் பிரித்து எடுக்கும் அனைத்துப் பயனர்களுக்கும் இதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டு உள்ளது.
பஞ்சாப் மாநிலத்தின் தொகுதிகள் வருடாந்திர நிலத்தடி நீர் பிரித்தெடுத்தல் அளவை அடிப்படையாகக் கொண்டு மூன்று மண்டலங்களாக (பச்சை, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு) வகைப் படுத்தப் பட்டுள்ளன.