UCG (நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம்) விதிகளுடன் கூடிய நான்கு நிலக்கரித் தொகுதிகளுக்கான நிலக்கரிச் சுரங்க மேம்பாடு மற்றும் உற்பத்தி ஒப்பந்தங்களில் மத்திய நிலக்கரி அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது.
இந்தியாவின் வணிக ரீதியான நிலக்கரி சுரங்கங்களில் 'நிலத்தடி நிலக்கரி வாயுவாக்கம்' (UCG) பயன்படுத்தப்படுவது இதுவே முதல் முறையாகும்.
UCG என்பது நேரடியாக நிலக்கரியை வெட்டி எடுக்காமல், பூமிக்கு அடியில் வைத்து நிலக்கரியை செயற்கை எரிவாயுவாக (syngas) மாற்றும் முறையாகும்.
செயற்கை எரிவாயு என்பது ஹைட்ரஜன், கார்பன் மோனாக்சைடு மற்றும் மீத்தேன் ஆகியவற்றைக் கொண்டுள்ளதுடன் இது உரங்கள், பெட்ரோலிய வேதிப்பொருட்கள் மற்றும் எரிபொருட்களில் பயன்படுத்தப்படுகிறது.
மிகவும் ஆழமான அல்லது வெட்டி எடுக்க முடியாத நிலக்கரி இருப்புகளைப் பயன்படுத்த இது உதவுவதோடு இறக்குமதி செய்யப்படும் இயற்கை எரிவாயு மற்றும் நாப்தா மீதான சார்பையும் இது குறைக்கிறது.