நிலப் பரப்பிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நடுத்தர வரம்புடைய ஏவுகணை
May 19 , 2019 2254 days 798 0
இந்தியக் கடற்படையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு மற்றும் இஸ்ரேல் விண்வெளி தொழிற்துறை நிறுவனத்துடன் இணைந்து நிலப் பரப்பிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் நடுத்தர வரம்புடைய ஏவுகணையை (MRSAM - Medium Range Surface to Air Missile) வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது.
இந்த MRSAM ஏவுகணைகளானது பின்வருவனவற்றை மேம்படுத்துகின்றது.
இந்தியக் கடற்படையின் வான் எதிர்ப்பு போர்த் திறன்.
ஒட்டுமொத்த போர்த் திறன் நடவடிக்கைகள்.
இந்த நிலப் பரப்பிலிருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கி அழிக்கும் ஏவுகணைகளானது கொல்கத்தா பிரிவு அழிப்புக் கப்பல்களில் பொருத்தப்பட விருக்கின்றது. மேலும் இது எதிர்காலத்தில் இந்தியக் கடற்படையில் இணையவிருக்கும் அனைத்து முக்கியமான கப்பல்களிலும் பொருத்தப்படவிருக்கின்றது.