TNPSC Thervupettagam

நிலப் பிரிவுகளுக்கான பூ-ஆதார்

March 4 , 2026 3 days 53 0
  • டெல்லி அரசாங்கம் ஒவ்வொரு நிலப் பிரிவுகளுக்கும் தனித்துவமான 14 இலக்க அடையாள எண்ணை வழங்கும் பூ-ஆதாரை அறிமுகப்படுத்தியுள்ளது.
  • நிலப் பதிவுகளை நவீனமயமாக்குவதற்கும் வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் இது தனித்துவமான நிலப் பிரிவு அடையாள எண் (ULPIN) அமைப்பின் ஒரு பகுதியாகும்.
  • ஒவ்வொரு நிலப் பிரிவும் துல்லியமான படமிடல் மற்றும் உரிமை சரி பார்ப்புக்காக புவியிடம் குறிப்பிடப்பட்ட குறியீட்டைக் கொண்டிருக்கும்.
  • ட்ரோன்வழி ஆய்வுகள் மற்றும் டிஜிட்டல் படமிடல் ஆயத் தொலைவுகள், அளவு மற்றும் உரிமை விவரங்களை உள்ளடக்கிய துல்லியமான நில வரைபடங்களை உருவாக்கும்.
  • இந்த அமைப்பு தகராறுகளைக் குறைத்து, பலமுறை செய்யப் படும் பதிவுகளைத் தடுக்கும் என்பதோடு மேலும் ஒருங்கிணைந்த நிலத் தகவல் மேலாண்மை அமைப்பை (ILIMS) ஆதரிக்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்