பூமிக்கு அருகில் சுற்றி வரும் 2025 PN7 என்ற புதிய நிலவினை ஒத்த வானியல் அமைப்பின் கண்டுபிடிப்பை வானியலாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
2025 PN7 ஆனது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளாக சூரியனைச் சுற்றியுள்ள பூமியின் சுற்றுப் பாதைக்கு அருகில் ஒரு குறிப்பிட்டப் பாதையைப் பின்பற்றி வருகிறது ஆனால் இது சமீபத்தில் தான் கண்டறியப்பட்டது.
சுமார் 30 மீட்டர் (98 அடி) விட்டம் கொண்ட இதனை, அதன் சிறிய அளவு மற்றும் குறைந்தப் பிரதிபலிப்பு காரணமாக கண்டறிவது கடினமாக இருந்தது.
ஒரு நிலவினை ஒத்த வானியல் அமைப்பு சூரியனுடன் 1:1 என்ற ஒத்திசைவில் பூமியின் சுற்றுப் பாதையைப் பகிர்ந்து கொள்கிறது என்றாலும், அது புவியுடன் ஈர்ப்பு விசையால் பிணைக்கப் படவில்லை.
பூமியின் ஈர்ப்பு விசையால் தற்காலிகமாகப் ஈர்க்கப்படும் குறு-நிலவுகளைப் போல அல்லாமல், நிலவினை ஒத்த அமைப்புகள் பூமியுடன் சேர்த்து சூரிய சுற்றுப்பாதையில் இருக்கும்.
2025 PN7 ஆனது பூமியைப் போன்ற சுற்றுப் பாதைகளைக் கொண்ட பூமிக்கு அருகில் உள்ள சிறுகோள்களின் அர்ஜுனா குழுவினைச் சேர்ந்தது.
காமோ'ஓலேவா மற்றும் 2024 PT5 போன்ற பிற அறியப்பட்ட நிலவினை ஒத்த அமைப்புகள் நிலவின் தோற்றத்திற்கான அறிகுறிகளைக் கொண்டுள்ளன.
2025 PN7 ஆனது குதிரை லாட வடிவச் சுற்றுப்பாதையில் செல்வதற்கு முன்பு சுமார் 60 ஆண்டுகள் பூமிக்கு அருகில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.