TNPSC Thervupettagam

நிலவிற்கான ஆய்வுப் பெட்டக ஏவு வாகனம்

August 28 , 2025 25 days 74 0
  • இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு (ISRO) ஆனது இதுவரை இல்லாத அளவிற்கு கனமான ஏவு வாகனமான நிலவிற்கான ஆய்வுப் பெட்டக ஏவு வாகனத்தை (LMLV) உருவாக்கி வருகிறது.
  • LMLV ஆனது 2040 ஆம் ஆண்டிற்குள் திட்டமிடப்பட்ட நிலவு ஆய்வுக் குழு பயணங்கள் மற்றும் விண்வெளி ஆய்வுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • இது நிலவிற்குச் சுமார் 27 டன் எடையுள்ள ஆய்வுக் கருவிகளையும், புவி தாழ்மட்டச் சுற்றுப்பாதைக்கு 80 டன் எடையுள்ள பொருட்களையும் கொண்டு செல்லும் திறன் கொண்டது.
  • இந்த ஏவு வாகனம் ஆனது மேம்படுத்தப் பட்ட கிரையோஜெனிக் மற்றும் பகுதியளவு-கிரையோஜெனிக் உந்துவிசை அமைப்புகளைப் பயன்படுத்தும்.
  • இஸ்ரோவின் ஏவு வாகன பரிணாமம் ஆனது 1963 ஆம் ஆண்டில் ஆய்வு ஏவு வாகனங்களுடன் தொடங்கியது, இதில் SLV-3, ASLV, PSLV, GSLV மற்றும் LVM-3 ஆகியவை அடங்கும்.
  • மனித விண்வெளி ஆய்வுப் பயணம் போன்ற இந்தியாவின் இலட்சிய இலக்குகளுக்கான ஆற்றல் மற்றும் திறனில் LMLV முந்தைய அனைத்து ஏவு வாகனங்களையும் விஞ்சும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்