இது ஐ.நா. சபையின் 10வது நிலையான மேம்பாட்டு இலக்குகள் அறிக்கை (2025) ஆகும்.
இது ஐ.நா. சபையின் பொருளாதார மற்றும் சமூக விவகாரத் துறையால் (UN DESA) தயாரிக்கப் பட்டது.
அளவிடக்கூடிய SDG இலக்குகளில் 35% தேக்கமடைந்து அல்லது தலைகீழாக மாறி வருவதாகவும், 2030 ஆம் ஆண்டு என்ற இலக்கு ஆண்டினை அடைய இன்னும் ஐந்து ஆண்டுகளே மீதமுள்ள நிலையில் இருப்பதாகவும் அது எச்சரிக்கிறது.
அளவிடக்கூடிய தரவுகளுடன் கூடிய 17 இலக்குகளில் 14 இலக்குகள் சுமார் 35 சதவீதம் நிறுத்தப்பட்டுள்ளன அல்லது பின்னோக்கி நகர்கின்றன.
இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள், பட்டினி நிலையற்ற நிலை (SDG2), தரமான கல்வி (SDG4), தூய்மையான நீர் மற்றும் சுகாதாரம் (SDG6), முறையான வேலை மற்றும் பொருளாதார மேம்பாடு (SDG8) மற்றும் குறைக்கப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் (SDG10) போன்ற ஐந்து முக்கியமான இலக்குகளுக்கு குறிப்பாக எச்சரிக்கை அளிக்கக் கூடியதாக உள்ளன என்பதோடு இதில் தரவுகளுடன் கூடிய இலக்குகளில் சுமார் 50-57 சதவீதம் தேக்கமடைந்துள்ளன அல்லது மோசமடைந்துள்ளன.
பொறுப்பான நுகர்வு மற்றும் உற்பத்தி (SDG12), நீரடி உயிரினங்கள் (SDG14), நில வாழ் உயிரினம் (SDG15), மற்றும் அமைதி, நீதி மற்றும் வலுவான நிறுவனங்கள் (SDG16) – ஆகிய நான்கு பிற இலக்குகளும் சிறப்பாகச் செயல்படவில்லை, அவற்றின் அளவிடக் கூடிய இலக்குகளில் 40 முதல் 42 சதவீதம் வரை அதற்கான பாதையில் செல்லவில்லை.
அதன் மக்கள்தொகையில் 23.2 சதவீதம் பேர் பட்டினி நிலையை எதிர்கொண்டுள்ளது என்பதுடன் ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் மிகவும் உயர்ந்த விகிதம் காணப் பட்ட அதே நேரத்தில் 281 மில்லியன் பேர் பட்டினி நிலையில் உள்ளதுடன் தெற்காசியா மிகப்பெரிய அளவில் முழுமையான பட்டினி நிலையில் உள்ள மக்களின் எண்ணிக்கையைக் கொண்டுள்ளது.