நிலையான வளர்ச்சிப் பிரிவு – மத்திய நிலக்கரித் துறை அமைச்சகம்
December 18 , 2019 2064 days 629 0
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலையான நிலக்கரிச் சுரங்கத் துறையை மேம்படுத்துவதற்காக மத்திய நிலக்கரித் துறை அமைச்சகமானது “நிலையான வளர்ச்சிப் பிரிவை” (Sustainable Development Cell - SDC) நிறுவ உள்ளது.
சுரங்கங்களை மூடும் போது எழும் சுற்றுச்சூழல் பிரச்சினைகளை நிவர்த்தி செய்வதே இந்தப் பிரிவின் முக்கிய நோக்கமாகும்.
இந்தப் பிரிவானது நிலையான சுரங்கச் சுற்றுலா, சுரங்க நீர் மேலாண்மை, காற்றின் தரம் மற்றும் நிலையான வேலைப்பளு மேலாண்மை ஆகியவற்றின் மீது கவனம் செலுத்த இருக்கின்றது.
மேலும் இந்தப் பிரிவானது சுரங்க மூடல் நிதியத்தையும் அமைக்க இருக்கின்றது.