மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆந்திரப் பிரதேசத்தின் முக்கியமான வளம் கொண்ட நபர்களுக்காக முதன்முறையாக நிஷ்தா என்ற ஒரு திட்டத்தைத் தொடங்கியுள்ளார்.
நிஷ்தா என்பது பள்ளித் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களின் முழுமையான மேம்பாட்டிற்கான ஒரு தேசிய முன்னெடுப்பு என்பதாகும்.
தன்னளவில் இதே வகையைச் சேர்ந்த உலகின் மிகப்பெரிய ஆசிரியர்கள் பயிற்சித் திட்டம் இதுவாகும்.
இந்த முன்னெடுப்பானது மத்திய மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் (HRD - Human Resources Development) பள்ளிக் கல்வி மற்றும் எழுத்தறிவுத் துறையின் கீழ் ஒரு ஒருங்கிணைந்த ஆசிரியர் பயிற்சித் திட்டமாகும்.
இது HRDயின் கீழ் மத்திய அரசினால் ஆதரவளிக்கப்படும் ஒரு திட்டமான சமக்ர சிக்சா என்பதின் கீழ் தொடக்க நிலைக் கல்வி அளவில் நடத்தப்படுகின்றது.
மத்திய அரசினால் ஆதரவளிக்கப்படும் திட்டமான சமக்ர சிக்சாவின் கீழ் தொடக்க நிலைக் கல்வி அளவில் கற்றல் முடிவுகளை மேம்படுத்துவதற்காக தேசியத் திட்டம் ஒன்று உள்ளது.