TNPSC Thervupettagam

நீடித்த வளர்ச்சிக்கான இலக்குகள் - கண்காணிப்பு

July 2 , 2019 2202 days 686 0
  • மத்தியப் புள்ளியியல் மற்றும் திட்ட செயல்படுத்துதல் துறை அமைச்சகமானது தேசியப் புள்ளியியல் தினக் கொண்டாட்டத்தின் போது இந்தியாவின் முதலாவது நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான (SDG - Sustainable Development Goal) தகவல் மேலாண்மை அமைப்பைத் (Dashhoard) தொடங்கியுள்ளது.
  • இது ஐக்கிய நாடுகளினால் ஏற்றுக் கொள்ளப்பட்ட செயல்நிரல் 2030 மீதான நாட்டின் செயல்பாடுகளைத் திறமையுடன் கண்காணிப்பதற்கான ஒரு முயற்சியாகும்.
  • இந்தியாவின் தேசிய வழிகாட்டுக் கட்டமைப்பின் மூலம் SDG மீதான தனது செயல்பாடுகளை மிக நுணுக்கத்துடன் இந்தியா கண்காணித்துக் கொண்டிருக்கின்றது. 2018 ஆம் ஆண்டில் இந்தியா SDG குறியீடு வெளியிடப்பட்டது.
  • உலக மக்கட் தொகையில் 17 சதவிகித மக்கட்தொகையைக் கொண்டுள்ள இந்தியாவின் SDG மீதான செயல்பாடுகள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்