TNPSC Thervupettagam

நீட் (NEET) விலக்கு தீர்மானம் 2026

August 13 , 2026 6 days 104 0
  • இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்விலிருந்து (NEET) விலக்கு அளிக்கக் கோரி தமிழ்நாடு சட்டமன்றம் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றியது.
  • இந்த விலக்கினை வழங்க சம்பந்தப்பட்ட மத்திய சட்டங்களில் திருத்தம் செய்ய வேண்டும் என்று மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் கே.ஜி. அருண்ராஜ் மத்திய அரசை வலியுறுத்தினார்.
  • இத்தீர்மானம் தேசிய மருத்துவ ஆணையச் சட்டம் 2019, இந்திய மருத்துவ முறைக்கான தேசிய ஆணையச் சட்டம் 2020, தேசிய ஹோமியோபதி ஆணையச் சட்டம் 2020 மற்றும் பிற தொடர்புடைய சட்டங்களில் மாற்றங்களைக் கோரியது.
  • பாரதிய ஜனதா கட்சியின் (BJP) ஒரே சட்டமன்ற உறுப்பினரான எம். போஜராஜன் இத்தீர்மானத்தை எதிர்த்ததுடன், வாக்கெடுப்புக்கு முன்பு வெளிநடப்பு செய்தார்.
  • 2021 ஆம் ஆண்டில், நீட் தேர்விலிருந்து விலக்கு கோரும் தமிழ்நாடு இளநிலை மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கை மசோதாவை (சட்டமன்ற மசோதா எண். 43/2021) சட்டமன்றம் நிறைவேற்றியது.
  • குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்ட 2021 ஆம் ஆண்டின் மசோதாவிற்கான குடியரசுத் தலைவரின் ஒப்புதல் நிறுத்தி வைக்கப்பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்