நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி – தனுஷ்
February 24 , 2019 2494 days 848 0
‘தனுஷ்’ வகையிலான 114 பீரங்கித் துப்பாக்கிகளை உற்பத்தி செய்வதற்கான அனுமதியை இந்திய இராணுவம் மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சகத்திடமிருந்து இராணுவத் தொழிற்சாலை ஆணையம் (Ordnance Factory Board - OFB) பெற்றுள்ளது.
இந்தியாவில் தயாரிக்கப்படும் முதலாவது நீண்ட இலக்கு வரம்புடைய பீரங்கித் துப்பாக்கி “தனுஷ்” ஆகும். இது “இந்தியாவில் தயாரிப்போம்” என்ற முன்னெடுப்பின் ஒரு மிகப்பெரிய வெற்றியாகும்.
தனுஷ் வகையிலான பீரங்கித் துப்பாக்கியானது இயந்திரத்தனமான மற்றும் மின்னணு முறையில் முறையே வரம்பை அதிகரிக்குமாறும் துல்லியத் தன்மையை அதிகரிக்குமாறும் மேம்படுத்தப்பட்டுள்ளது.
இதில் உள்ள சுய உந்து விசை அலகானது அதன் துப்பாக்கி சிறந்த முறையில் செயல்படவும் மிக எளிதாக மலைப் பிரதேசங்களில் தன்னகத்தே அதைப் பொருத்திக் கொள்ளவும் அனுமதிக்கிறது.