நீண்ட காலமாகப் பணியாற்றும் காங்கிரஸ் கட்சி அல்லாத பிரதமர்
August 18 , 2020 1834 days 752 0
நாட்டில் நீண்ட காலமாக பிரதமராகப் பணியாற்றும் காங்கிரஸ் கட்சியைச் சேராத ஒரு ஆளுமை நரேந்திர மோடி ஆவார் (2014 ஆம் ஆண்டு மே 26 ஆம் தேதியிலிருந்து ஆகஸ்டு 13 ஆம் தேதி வரை).
மேலும் இவர் 18 ஆண்டுகளாக ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக உள்ளார். அரசாங்கத்தின் தலைவரால் வகித்து வரும் ஒரு நீண்ட பதவிக் காலம் இதுவாகும்.
இது 2014 ஆம் ஆண்டில் இந்தியாவின் பிரதமராகப் பதவி ஏற்பதற்கு முன்பு குஜராத்தின் முதல்வராகப் பதவி வகித்ததையும் (2001 ஆம் ஆண்டு அக்டோபர் 7 முதல் 2014 ஆம் ஆண்டு மே 22 வரை) உள்ளடக்கியுள்ளது.
இவர் முதலமைச்சராகவும் இந்தியாவின் பிரமராகவும் 18 ஆண்டுகள் 306 நாட்களை நிறைவு செய்துள்ளார்.
இதற்கு முன்பு, இந்தியாவின் முதலாவது பிரதமரான நேரு இந்தியாவின் பிரதமராக 16 ஆண்டுகள் 286 நாட்கள் இருந்தார்.
நாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசின் தலைவராக மூன்றாவது மிக நீண்ட பதவிக் காலத்தைக் கொண்டவர் இந்திரா காந்தி ஆவார். இவர் 15 ஆண்டுகள் 350 நாட்கள் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார்.
காங்கிரசைச் சார்ந்த ஜவஹர்லால் நேரு, இந்திரா காந்தி மற்றும் மன்மோகன் சிங் ஆகியோர் இந்த வரிசையில் நீண்ட காலம் பிரதமர் பதவி வகித்த மூன்று நபர்கள் ஆவார்.