நீண்ட காலமாக திருமணம் ஆகாமல் சேர்ந்து வாழுதல் - யூக அடிப்படையில் திருமணமாகவே கருதப்படும் - உச்ச நீதிமன்றம்
November 11 , 2018 2433 days 747 0
இந்திய உச்ச நீதிமன்றமானது யூகத்தின் அடிப்படையில்
இருவர் கணவன் மனைவியாக இணைந்து வாழுதல் சட்டபூர்வமான திருமணமாகும்
பெண்கள் தங்களது பராமரிப்பிற்கு குற்றவியல் நடைமுறை தொகுப்புச் சட்டத்தின் 125 பிரிவின் கீழ் உரிமை கோர முடியும்
என்று தீர்ப்பு அளித்தது.
இந்த உத்தரவு உச்ச நீதிமன்ற நீதிபதிகளான R. பானுமதி மற்றும் இந்திரா பானர்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வால் வழங்கப்பட்டது.
இந்த உத்தரவானது 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கர்நாடக உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து ஒரு பெண் மேல்முறையீடு செய்ததன் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.