நீண்ட தங்க நிற வால் உடைய குரங்க வகை (கோல்டன் லங்கூர்) பாதுகாப்பு இனவிருத்தித் திட்டம் - அசாம்
February 2 , 2019 2296 days 746 0
அசாம் மாநில சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சர் பிரமிளா ராணி பிரம்மா அம்மாநிலத்தில் கோல்டன் லங்கூர் பாதுகாப்பு இனவிருத்தித் திட்டத்தின் வெற்றியை அறிவித்தார்.
இத்திட்டத்தின் நோக்கம் தற்சமயம் அருகிவரும் நிலையில் வகைப்படுத்தப்பட்டிருக்கும் இவ்வினத்தின் இனவிருத்தியை மேற்கொள்வதன் மூலம் அடர் வனங்களில் தாமாகவே தமது இனவிருத்தியை அவை மேற்கொள்ள இயலச் செய்வதாகும்.
1953 ஆம் ஆண்டில் இயற்கையாளர் P. ஜீ என்பவரால் கோல்டன் லங்கூர் (டிராகிபிக்தீகஸ் ஜீ) கண்டறியப்பட்டது.
இந்த லங்கூர் இனங்கள் மரங்களின் இலைகளை உண்ணும் குரங்கு வகைகளாகும்.
இவை பிரதானமாக மானஸ் அசாமின் காடுகளிலும் முக்கியமாக உயிர்க்கோள மையத்தின் பகுதிகளிலும் பூடானிலும் மட்டுமே காணப்படுகின்றன.