TNPSC Thervupettagam

நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயது

April 29 , 2026 2 days 69 0
  • நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை 60-லிருந்து 61 அல்லது 62 ஆக உயர்த்துவதற்கான முன்மொழிவைத் தமிழ்நாடு அரசு பரிசீலித்து வருகிறது.
  • இந்த முன்மொழிவு கீழ்நிலை நீதிமன்றங்களில் உள்ள நடுவர்கள், முன்சீப்கள், சார்பு நீதிபதிகள், அமர்வு நீதிபதிகள் மற்றும் மாவட்ட நீதிபதிகளை உள்ளடக்கியதாகும்.
  • தெலுங்கானா மற்றும் ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் ஏற்கனவே நீதித்துறை அதிகாரிகளின் ஓய்வு வயதை உயர்த்தியுள்ளதால், இதுவும் நடைமுறைப்படுத்தப்பட அதிக வாய்ப்புள்ளது.
  • தெலுங்கானா மாநில நீதித்துறை (பணி மற்றும் இடமாற்றம்) விதிகள், 2023-இன் மூலம் தெலுங்கானா ஓய்வு வயதை 61 ஆக உயர்த்தியது, அதே சமயம், ஆந்திரப் பிரதேசம் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் அமலுக்கு வரும் வகையில் 60-லிருந்து 61 ஆக உயர்த்தியது.
  • ஓய்வு பெறும் வயதை 58-இல் இருந்து 60 ஆக உயர்த்திய அகில இந்திய நீதிபதிகள் சங்க வழக்கு மற்றும் அதனைத் தொடர்ந்து 1993 மற்றும் 2002 ஆம் ஆண்டுகளில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்புகளை இந்த முன்மொழிவு மேற்கோள் காட்டுகிறது.
  • ஊதியம், படிகள் மற்றும் பணி நிலைமைகள் குறித்த முதல் தேசிய நீதித்துறை ஊதியக் குழுவின் (ஷெட்டி கமிஷன்) பரிந்துரைகளையும் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
  • பி.வி. ரெட்டி தலைமையிலான இரண்டாவது தேசிய நீதித்துறை ஊதியக் குழு (2017), இந்தியா முழுவதும் ஒரே மாதிரியான பணி நிலைமைகள் இருக்க வேண்டியதன் அவசியத்தையும், தேங்கி நிற்கும் வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அனுபவம் வாய்ந்த நீதிபதிகளைத் தக்கவைத்துக் கொள்ள வேண்டியதன் தேவையையும் வலியுறுத்தியது.
  • கீழ்நிலை நீதித்துறையில் இந்தியாவின் ஓய்வு வயதான 60 என்பது, ஐக்கிய பேரரசு, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, ஜப்பான் மற்றும் கனடா (இங்கு 70-75 வயதாக உள்ளது) போன்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் உலகிலேயே மிகக் குறைவான ஒன்றாகும்.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்