நீதிபதி யஷ்வந்த் வர்மாவை நீக்கியது குறித்து விசாரிப்பதற்காக மக்களவை சபாநாயகர் அமைத்த விசாரணைக் குழுவை உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.
ஒரு சபையில் (மக்களவை அல்லது மாநிலங்களவை) ஒரு தீர்மானத்தை நிராகரிப்பது மற்றொரு சபை விசாரணைக் குழுவை அமைப்பதைத் தடுக்காது.
124 (உச்ச நீதிமன்ற நீதிபதிகள்) மற்றும் 218 (உயர் நீதிமன்ற நீதிபதிகள்) ஆகிய சரத்துகள் நீதிபதிகளை நீக்குவது குறித்த விதிகளை கொண்டுள்ளன.
நிரூபிக்கப்பட்ட தவறான நடத்தை அல்லது இயலாமை போன்ற சூழலில் மட்டுமே நீதிபதிகளை நீக்க முடியும்.
விசாரணைக் குழுவில் உச்ச நீதிமன்ற நீதிபதி, உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி மற்றும் ஒரு புகழ்பெற்ற சட்ட வல்லுநர் ஆகியோர் உள்ளனர் என்பதோடுஇது அந்தத் தீர்மானம் ஏற்றுக் கொண்ட பிறகு சபாநாயகர் அல்லது அவைத் தலைவரால் அமைக்கப் படுகிறது.
இந்த தீர்மானத்திற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் சிறப்பு பெரும்பான்மை தேவைப்படுவதுடன் இந்தியக் குடியரசுத் தலைவரால் பதவி நீக்கம் செய்யப்படுகிறது.
இதுவரையில் உயர் மட்ட நீதித்துறையின் எந்த நீதிபதியும் பதவி நீக்கம் செய்யப் படவில்லை.