TNPSC Thervupettagam
May 20 , 2025 16 hrs 0 min 46 0
  • உச்ச நீதிமன்ற நீதிபதி பேலா திரிவேதி சமீபத்தில் ஓய்வு பெறுவதாக அறிவித்தார்.
  • உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகால வரலாற்றில் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி உயர்வு பெற்ற பதினொன்றாவது பெண் நீதிபதி இவர் ஆவார்.
  • 1995 ஆம் ஆண்டில் குஜராத்தின் அகமதாபாத்தில் ஒரு நகர உரிமையியல் நீதிமன்ற நீதிபதியாக தனது பணியைத் தொடங்கினார்.
  • அவர் அந்தப் பதவியில் நியமிக்கப்பட்ட போது அவரது தந்தையும் அதே நகர உரிமையியல் மற்றும் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதியாகவும் பணியாற்றினார்.
  • லிம்கா புக் ஆஃப் இந்தியா ரெகார்ட்ஸ் ஆனது, அதன் 1996 ஆம் ஆண்டு பதிப்பில் "ஒரே நீதிமன்றத்தில் நீதிபதிகளாக பணியாற்றிய அப்பா-மகள்" என்று பதிவு செய்துள்ளது.
  • 2004 மற்றும் 2006 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் குஜராத் மாநில அரசாங்கத்தின் சட்டச் செயலாளராகவும் அவர் பணியாற்றினார்.
  • அவர் 2011 ஆம் ஆண்டில் குஜராத் உயர் நீதிமன்றத்திற்கு பதவி உயர்த்தப் பட்டார்.
  • 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 31 ஆம் தேதியன்று அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப் பட்டார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்