இந்தியாவில் நீதிபதி மற்றும் மக்கள்தொகை இடையேயான விகிதமானது 2020 ஆம் ஆண்டில் 1 மில்லியன் மக்களுக்கு 21.03 நீதிபதிகள் என்று இருந்தது.
இந்த விகிதமானது 2018 ஆம் ஆண்டில் 1 மில்லியன் மக்களுக்கு 19.87 நீதிபதிகள் எனவும், 2019 ஆம் ஆண்டில் 20.39 நீதிபதிகள் எனவும் இருந்தது.
இந்தியாவில் 25 உயர்நீதிமன்றங்கள் உள்ளன.
2014 ஆம் ஆண்டில் 31 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 34 ஆக உயர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 906 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட உயர்நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 1079 ஆக உயர்ந்துள்ளது.
2014 ஆம் ஆண்டில் 19,518 ஆக இருந்த அங்கீகரிக்கப்பட்ட மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்ற நீதிபதிகளின் எண்ணிக்கையானது 2020 ஆம் ஆண்டில் 24,225 ஆக உயர்ந்துள்ளது.