ஆந்திர முதல்வர் ஜெகன் ரெட்டி மீது அவமதிப்பு வழக்கைத் தொடங்க இந்திய அரசாங்கத் தலைமை சட்ட அதிகாரி மறுத்துள்ளார்.
கடந்த மாதம் முதல்வர் ஜெகன் ரெட்டி அவர்கள் ஆந்திர மாநில உயர்நீதி மன்றமானது ஜனநாயக ரீதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட தனது அரசாங்கத்தைச் சீர்குலைக்க மற்றும் கவிழ்க்க பயன்படுத்தப் படுவதாகக் குற்றம் சாட்டி, இந்தியத் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டேவுக்கு கடிதம் எழுதியிருந்தார்.
இந்திய அரசியலமைப்பின் 129 மற்றும் 215 ஆவது சட்டப் பிரிவுகள், முறையே உச்சநீதிமன்றம் மற்றும் உயர்நீதிமன்றத்திற்கு, அதனை அவமதிக்கும் பொருட்டு மக்களைத் தண்டிக்க அதிகாரம் அளிக்கின்றன.
1971 ஆம் ஆண்டின் நீதிமன்ற அவமதிப்புச் சட்டம், உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றத்தின் கீழுள்ள கீழமை நீதிமன்றங்களை அவமதிப்பதைத் தண்டிக்கும் அதிகாரத்தையும் வரையறுக்கிறது.