இந்திய உச்ச நீதிமன்றமானது இன்றிலிருந்து வரதட்சணைக் கொடுமை அல்லது கொடூரம் காரணமாக தனது புகுந்த வீட்டில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு பெண் தனது கணவர் மற்றும் மாமியாருக்கு எதிராக குடியிருக்கும் இடத்திலிருந்தே வழக்குப் பதிவு செய்யலாம் என்று உத்தரவிட்டுள்ளது.
அந்தப் பெண் இந்தியக் குற்றவியல் சட்டப் பிரிவு 498-ஏ வின் கீழ் எந்தவொரு எல்லை வரம்புமின்றி குற்றவியல் நடைமுறைகளை ஆரம்பிக்க முடியும்.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 177 ஆனது குற்றம் நடைபெற்ற வரம்பில் உள்ள நீதிமன்றங்களில் மட்டுமே வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரித்துத் தண்டனை வழங்குவதைக் கட்டாயமாக்கியுள்ளது.
இந்த முக்கியமான தீர்ப்பானது ரூபாலி தேவி எதிர் உத்தர பிரதேச அரசு மற்றும் பலர் என்ற வழக்கில் வழங்கப்பட்டது.