2025 ஆம் ஆண்டு தோஹா டைமண்ட் லீக் போட்டியில் நீரஜ் சோப்ரா 90.23 மீட்டர் தூரத்திற்கு ஈட்டி எறிந்து 90 மீட்டர் தூர வரம்பினை முறியடித்தார்.
இந்தப் பெரும் சாதனையானது ஒரு புதிய தனிப்பட்ட நபரின் சிறந்த மற்றும் தேசிய சாதனையாக அமைந்ததுடன், ஈட்டி எறிதலில் 90 மீட்டர் தூரம் வரை ஈட்டி எரிந்துள்ள வீரர்கள் குழுவில் இணைந்த முதல் இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
ஆடவர் ஈட்டி எறிதல் போட்டியின் வரலாற்றில் சுமார் 90 மீட்டர் தூரச் சாதனையினை முறியடித்த 25வது மனிதர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.