நீரில் மூழ்கி உயிரிழப்பதைத் தடுப்பதற்கான உலகளாவியக் கூட்டணி
June 5 , 2023 810 days 402 0
உலக சுகாதார சபையின் (WHA) உறுப்பினர் நாடுகள் நீரில் மூழ்கி உயிரிழப்பதை தடுப்பதற்கான ஒரு உலகளாவியக் கூட்டணியை நிறுவ ஒப்புக் கொண்டுள்ளன.
2029 ஆம் ஆண்டு வரையிலான காலகட்டம் வரை இந்தப் பிரச்சினை குறித்த உலகளாவியப் பொது சுகாதாரச் சிக்கல்களை நிவர்த்தி செய்யும் முதல் கூட்டணி இது ஆகும்.
வங்காளதேசம் மற்றும் அயர்லாந்து நாட்டு அரசாங்கங்களால் முன் வைக்கப்பட்ட இந்த தீர்மானமானது நீரில் மூழ்குவதைத் தடுப்பதற்கான பல்வேறு நடவடிக்கைகளை நன்கு ஒருங்கிணைப்பதற்காக உலக சுகாதார அமைப்பிற்கு (WHO) அழைப்பு விடுத்தது.
நீரில் மூழ்குவதால் ஏற்படும் 90 சதவீதத்திற்கும் அதிகமான உயிரிழப்புகள் குறைவான மற்றும் நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளில் தான் நிகழ்கின்றன.