நீரேற்றுப் புனல் மின்னாற்றல் சேமிப்பு திட்டக் கொள்கை 2024
September 11 , 2024 343 days 353 0
சமீபத்தில் 2024 ஆம் ஆண்டு தமிழ்நாடு நீரேற்றுப் புனல் மின்னாற்றல் சேமிப்பு திட்டக் கொள்கையினை (PSP) மாநில அரசு வெளியிட்டுள்ளது.
நிலையான எரிசக்தி மேம்பாட்டிற்கு ஆதரவளிப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் இலக்குகளை அடைவதற்கும், முதலீடுகளை ஈர்ப்பதற்கும், புதுப்பிக்கத்தக்க ஆற்றலை ஒருங்கிணைப்பதற்கும் வேண்டி நீரேற்றுப் புனல் மின்னாற்றல் சேமிப்பு நிலையங்களின் திறனைப் பயன்படுத்துவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
தமிழ்நாடு மாநிலமானது 9,000 மெகாவாட்டிற்கு மேலான காற்றாலை மின்னாற்றல் உற்பத்தித் திறன் மற்றும் 7,800 மெகாவாட் அளவிலான நிறுவப்பட்ட சூரிய சக்தி மின்னாற்றல் உற்பத்தி திறனைக் கொண்டுள்ளது.
மாநிலத்தின் மொத்த நிறுவப்பட்ட பசுமை ஆற்றல் திறன் 22,628 மெகாவாட் ஆகும்.
தமிழ்நாடு பசுமை எரிசக்தி கழகம் லிமிடெட் (TNGECL) ஆனது இந்தக் கொள்கையைச் செயல்படுத்துவதற்காக நியமிக்கப்பட்ட தலைமை முகமையாக இருக்கும்.