நீர்சார் முதலீடுகள் குறித்த உலகளாவியக் கண்ணோட்ட சபை (GOCWI)
August 19 , 2025 2 days 38 0
தென்னாப்பிரிக்க அதிபர் சிரில் இராமபோசா GOCWI சபையினைத் தொடங்கி வைத்து, இந்தியப் பிரதமர் மற்றும் பிற உலகத் தலைவர்களை இந்தச் சபையின் உறுப்பினர்களாகச் சேர அழைப்பு விடுத்தார்.
G20 அமைப்பின் முன்னெடுப்பான GOCWI, உலகளாவிய பருவநிலை மற்றும் நிதி விவாதங்களில் நீர்சார் முதலீட்டிற்கு முன்னுரிமை அளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இது G20, UN, MDB மற்றும் தனியார் துறைகளில் முன்னேற்றத்தைக் கண்காணிக்கும், நிதியை வெளிக் கொணரும் மற்றும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும்.
ஆப்பிரிக்கா நீர்சார் முதலீட்டுத் திட்டம் (AWIP) ஆனது தற்போது உலகளாவிய நீர் முதலீட்டுத் தளமாக (GWIP) மேம்படுத்தப்படும்.
G20 அமைப்பிற்கான தென்னாப்பிரிக்கா தலைமையின் கீழ் நடைபெற்ற 2025 ஆம் ஆண்டு ஆப்பிரிக்கா நீர்சார் முதலீட்டு உச்சி மாநாட்டின் போது இது தொடங்கப் பட்டது.
சபையின் உறுப்பினர்களில் இந்தியா, பிரேசில், ஐக்கியப் பேரரசு, ஜெர்மனி, மெக்சிகோ, சவுதி அரேபியா, ஆஸ்திரேலியா, EU, அங்கோலா மற்றும் செனகல் ஆகிய நாடுகளின் தலைவர்கள் அடங்குவர்.