TNPSC Thervupettagam

நீர்த் தரக் குறியீடு - இந்தியா 120வது இடம்: 70 சதவிகிதம் மாசுபாடு

December 16 , 2019 2060 days 508 0
  • நிதி ஆயோக் அமைப்பானது “கூட்டு நீர்த் தர மேலாண்மைக் குறியீடு” என்ற அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • நீர்த் தரக் குறியீட்டில் உள்ள 122 நாடுகளில் இந்தியா 120வது இடத்தில் உள்ளது. கிட்டத்தட்ட 70% நீர் இந்தியாவில் மாசுபட்டுள்ளது என்று இந்த அறிக்கை குறிப்பிடுகிறது.
  • 2020 ஆம் ஆண்டுக்குள் 21 முக்கிய நகரங்களில் நிலத்தடி நீர் பற்றாக்குறை ஏற்படும் என்று எதிர்பார்க்கப் படுவதாக நிதி ஆயோக் அறிக்கையானது குறிப்பிட்டுள்ளது.
  • வருடாந்திர அளவில் நிலத்தடி நீர் நிரப்புதல் மற்றும் அதனை உறிஞ்சி எடுக்கும் முறை ஆகியவற்றின் மதிப்பீடுகளின் அடிப்படையில் இந்தக் குறியீடு அமைந்துள்ளது.
  • இந்திய அரசானது ஜல் சக்தி அபியான் என்ற திட்டத்தினை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நிலத்தடி நீர் நிலைமை உள்பட நீர் கிடைப்பதை மேம்படுத்துவதற்கான ஒரு குறிப்பிட்ட கால அளவிலானப் பிரச்சாரமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்