மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் ஆந்திராவின் குண்டூரில் நீர்நிலைகளுக்கான மஹோத்சவம் என்ற நிகழ்வினைத் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்வு கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் கீழ் நிலவளத் துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய நீர்நிலைகள் மாநாட்டின் ஒரு பகுதியாகும்.
நிலையான மண் மற்றும் நீர் வளங்காப்பினை ஊக்குவிப்பதையும் நீர்நிலைகளின் மேம்பாட்டில் பொதுமக்களின் பங்களிப்பை வலுப்படுத்துவதையும் இந்த மஹோத்சவம் நோக்கமாகக் கொண்டிருந்தது.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டம் (MGNREGA) மூலம் முந்தைய நீர்நிலைகள் திட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புகளை மீட்டெடுப்பதற்காக நீர்நிலைகள் புத்துயிர்ப்புத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த முன்னெடுப்பு இந்தியா முழுவதும் நீர் வளங்காப்பு, தகவமைவு கொண்ட வேளாண்மை மற்றும் நிலையான கிராமப்புற வாழ்வாதாரங்கள் ஆகியவற்றில் அரசாங்கம் மேற்கொண்ட கவனத்தை எடுத்துக் காட்டுகிறது.