நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் பசுமைப் பரவல் அதிகரிப்பு திட்டம் - செங்கல் பட்டு
July 5 , 2025 99 days 332 0
செங்கல்பட்டு மாவட்டத்தில் தற்போது சுமார் 500 சிறு நீர்ப்பாசன குளங்கள் உள்ளன என்ற நிலையில் அவற்றுள் சுமார் 200 குளங்கள் 'நீர்நிலைகள் புனரமைப்பு மற்றும் பசுமைப் பரவல் அதிகரிப்புத் திட்டம் - செங்கல்பட்டு' (Mission Blue-Green Chengalpattu) என்ற திட்டத்தின் கீழ் புனரமைக்கப்படுகின்றன.
மாவட்ட ஊரக மேம்பாட்டு முகமை (DRDA) ஆனது, மேலும் 388 குளங்களை புனரமைப்பதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இந்திய சுற்றுச்சூழல் அறக்கட்டளை (EFI) ஆனது நீடித்த நிலையான முறைகளைப் பயன்படுத்தி 100 குளங்களைப் புனரமைத்து ஒரு முக்கியப் பங்குதாரராக உள்ளது.
கழிவு நீர் சுத்திகரிப்பு மற்றும் நிலத்தடி நீர் மறுசீரமைப்புக்குத் தாவரங்களின் வேர் மண்டல வடிகட்டுதல் சுத்திகரிப்பு முறையை அது பயன்படுத்தியது.
இங்கு வடகிழக்குப் பருவமழைக்கு மிக முன்னதாக நீர் கிடைக்கப் பெறும் தன்மையை மேம்படுத்தவதற்காக வேண்டி அக்டோபர் மாதத்தின் தொடக்கத்தில் பெரும்பாலான பணிகளை முடிக்க DRDA இலக்கு நிர்ணயித்துள்ளது.