இந்திய அரசு மற்றும் உலக வங்கி ஆகியவை 115 மில்லியன் மதிப்பிலான ஒரு கடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.
இது கர்நாடகா மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் “புதுமையான மேம்பாடுகள் மூலமாக வேளாண் நெகிழ்திறனுக்காக நீர்நிலைகளைப் புதுப்பித்தல்” திட்டத்தினை அமல்படுத்துவதற்கானதாகும்.
இந்தத் திட்டமானது கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் நில வளங்கள் துறை மற்றும் உலக வங்கி ஆகியவற்றின் ஒரு முன்னெடுப்பாகும்.
இது 2021 முதல் 2026 வரையில் 6 ஆண்டுகள் அளவிலான ஒரு திட்டமாக முன்மொழியப் பட்டுள்ளது.
இது உலகிலுள்ள மிகப்பெரிய நீர்நிலை மேலாண்மைத் திட்டங்களுள் ஒன்றாகும்.
இத்திட்டத்திற்கு உலக வங்கி 70% நிதியும் மாநில அரசுகள் 30% நிதியினையும் (70:30) வழங்க உள்ளன.