நீர்ப்பாசனம் மற்றும் மாறிவரும் மழைப் பொழிவு அமைப்புகள்
August 11 , 2019 2104 days 819 0
முதன்முறையாக, பம்பாயில் உள்ள இந்தியத் தொழில்நுட்பத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் நீர்ப்பாசனக் கொள்கையில் ஏற்படும் மாற்றமானது பின்வருவனவற்றை ஏற்படுத்தும் என்பதைக் கண்டறிந்துள்ளனர்.
பருவமழையை வடமேற்கு இந்தியாவிற்கு மாற்றும் திறன்.
மத்திய இந்தியாவில் மிகக் கடுமையான மழைப் பொழிவை ஏற்படுத்துதல்.
இது எவ்வாறு செயலாற்றுகின்றது?
செப்டம்பர் மாதத்தின்போது, விவசாய நிலங்கள் அதிக நீர்ப்பாசனம் பெற்று, பயிர்கள் முதிர்ச்சியடைந்தவையாக விளங்குகின்றன.
இதன் விளைவாக மிக அதிக அளவிலான நீராவிப் போக்கு ஏற்படுகின்றது. இதன் மூலம் நிலத்திலிருந்து வளிமண்டலத்திற்கு மாறும் ஈரப்பதத்தின் பங்களிப்பு அதிகமாக இருக்கும்.
ஈரப்பத அதிகரிப்பின் விளைவாக, பருவமழை அமைப்பு மற்றும் அதன் தீவிரத் தன்மை அதிகரிக்கின்றது.
இந்த ஆய்வானது நில - மேற்பரப்பு மாதிரியை, குறிப்பாக இந்திய நீர்ப்பாசனம் மற்றும் விவசாய அமைப்பை கணக்கில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.