தேசியப் புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் 19வது கூட்டமானது, மத்தியச் சுற்றுச் சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர் பூபேந்தர் யாதவ் தலைமையில் நடைபெற்றது.
இந்தச் சந்திப்பின் போது, மத்திய அமைச்சர் நீர்வள வரைபடத்தினை வெளியிட்டார்.
இந்த வரைபடமானது, இந்தியாவின் புலிகள் வாழும் பகுதிகளில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் வரைபடமிடுகிறது.
இந்த நீர்வள வரைபடத்தில், நிலப்பரப்பு வாரியான தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
இதில் சிவாலிக் மலைகள் மற்றும் கங்கைச் சமவெளி நிலப்பரப்பு, மத்திய இந்திய நிலப்பரப்பு மற்றும் கிழக்குத் தொடர்ச்சி மலைகள், மேற்குத் தொடர்ச்சி மலைகள் ஆகியவற்றின் நிலப்பரப்பு, வடகிழக்கு மலைகள் மற்றும் பிரம்மபுத்திரா ஆற்றுச் சமவெளிகள் மற்றும் சுந்தரவனக் காடுகள் ஆகியவை அடங்கும்.