TNPSC Thervupettagam

நீர்வாழ் உயிரி வளர்ப்பு ஏற்றுமதிக்கான ஐரோப்பிய ஒன்றிய சந்தை அணுகல்

June 12 , 2026 2 days 48 0
  • திருத்தப்பட்ட ஐரோப்பிய ஒன்றிய (EU) ஒழுங்குமுறை கட்டமைப்பின் கீழ், நீர்வாழ் உயிரி வளர்ப்பு பொருட்கள், தேன் மற்றும் முட்டைகளின் ஏற்றுமதிக்கான சந்தை அணுகலை இந்தியா தொடர்ந்து பாதுகாத்துள்ளது.
  • 2026 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குப் பிறகும் இந்தப் பொருட்களை ஏற்றுமதி செய்யத் தகுதியான அங்கீகரிக்கப்பட்ட நாடுகளின் பட்டியலில் இந்தியாவை ஐரோப்பிய ஒன்றியம் சேர்த்துள்ளது.
  • உணவுப் பொருட்களில் நுண்ணுயிர் எதிர்ப்புத் திறன் (AMR) தொடர்பான கவலைகளைத் தீர்க்க புதிய விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
  • ஐரோப்பிய ஒன்றியத்திற்கான இந்தியாவின் மீன் மற்றும் மீன்வளப் பொருட்களின் ஏற்றுமதி மதிப்பு சுமார் $1.59 பில்லியன் ஆகும் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியத்தை ஒரு முக்கியமான ஏற்றுமதிச் சந்தையாக இது மாற்றுகிறது.
  • வர்த்தகத் துறை, ஏற்றுமதி ஆய்வு சபை (EIC) மற்றும் கடல்சார் பொருட்கள் ஏற்றுமதி மேம்பாட்டு ஆணையம் (MPEDA) ஆகியவற்றின் ஒருங்கிணைப்பைத் தொடர்ந்து இந்தச் சாதனை எட்டப்பட்டுள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்