நீர் ஏற்பு பலபடிச் சேர்மம் - இந்திய அறிவியல் கல்வி நிறுவனம்
April 20 , 2024 481 days 404 0
இந்திய அறிவியல் கல்வி நிறுவனத்தின் (IISc) ஆராய்ச்சியாளர்கள், நீரிலிருந்து நுண் நெகிழிகளை அகற்றுவதற்காக ஒரு நிலையான நீர் ஏற்பு பலபடிச் சேர்மத்தினை (ஹைட்ரோஜெல்) வடிவமைத்துள்ளனர்.
ஆராய்ச்சியாளர்களால் வடிவமைக்கப்பட்ட இந்த நிலையான ஹைட்ரோஜெல் ஆனது ஒரு தனித்துவமான பின்னிப் பிணைந்த பலபடிச் சேர்ம வலையமைப்பினைக் கொண்டுள்ளது என்பதோடு இது மாசுக்களைத் தன்னுடன் பிணைத்து, புற ஊதா ஒளி கதிர்வீச்சைப் பயன்படுத்தி அவற்றைச் சிதைக்கிறது.
ஹைட்ரோஜெல் ஆனது நீரில் உள்ள இரண்டு வகையான நுண் நெகிழிகளை முறையே சுமார் 95% மற்றும் 93% என்ற அளவில் நடுநிலை அளவிலான அமில கார குறியீடு pH (∼6.5) மதிப்பில் அகற்றுவதால் மிகவும் செயல்திறன் மிக்கதாக உள்ளது.
அறிவியலாளர்கள் நுண் நெகிழிகளை அகற்றுவதற்காக முன்னதாக வடிகட்டுதல் சவ்வுகளைப் பயன்படுத்தி முயற்சித்துள்ளனர்.
ஆனால், சவ்வுகள் இந்தச் சிறிய துகள்களால் அடைக்கப்பட்டு, அவற்றைத் தொடர்ந்து பயன்படுத்த முடியாததாக மாற்றும்.
இந்த சிறிய நெகிழிக் குப்பைகள் குடிநீரின் மூலம் நம் உடலுக்குள் நுழைந்து நோய் பாதிப்பு அபாயத்தை அதிகரிக்கும் என்பதால் இந்த நுண் நெகிழிகள் என்பவை மனித ஆரோக்கியத்திற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன.