TNPSC Thervupettagam

நீர் சார்ந்த ஹைட்ரஜன் எரிபொருள்

September 22 , 2025 15 hrs 0 min 17 0
  • HONC கேஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனமானது, சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரை ஹைட்ரஜன் வாயுவாக மாற்றும் தொழில்நுட்பத்தை உருவாக்கியுள்ளது.
  • இந்த நிறுவனமானது, தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அவினாசியில் அமைந்துள்ளது.
  • இந்தத் தொழில்நுட்பமானது, தனியுரிம பல நிலை மின்னாற்பகுப்பு மற்றும் எரிவாயு கலப்பு கலவை செயல்முறையைப் பயன்படுத்துகிறது.
  • இந்தச் செயல்முறையானது கார்பன் உமிழ்வுகள் இல்லாமல் சுத்திகரிக்கப்பட்ட நீரிலிருந்து உடனடியாக ஹைட்ரஜன் எரிபொருளை உருவாக்குகிறது.
  • இந்தக் கண்டுபிடிப்பில் துல்லியமான ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் கலவையை உருவாக்கும் கைராய்டு எலக்ட்ரோலைட் சவ்வு (GEM) அடங்கும்.
  • GEM தொழில்நுட்பம் சேமிப்பு அல்லது அழுத்தம் இல்லாமல் தேவைக்கேற்ப ஹைட்ரஜன் எரிபொருள் உற்பத்தியைச் செயல்படுத்துகிறது.
  • இந்த அமைப்பானது நேரடி மின்னோட்டம் (DC) அல்லது சூரிய சக்தியைப் பயன்படுத்துகிறது மற்றும் செயல்பாட்டின் போது ஆற்றலை மறுசுழற்சி செய்கிறது.
  • இந்த மின்னியற்றிகள் குறைந்தபட்ச தண்ணீரைப் பயன்படுத்துகின்றன, மேலும் அவை முழுமையாக உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்டவையாகும்.
  • இந்த தொழில்நுட்பமானது காப்புரிமை செயல்முறையை நிறைவு செய்துள்ளது.
  • இது மாநில மற்றும் மத்திய அரசு அதிகாரிகளிடம் ஒப்புதலுக்காக சமர்ப்பிக்கப் பட்டு உள்ளது.

 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்