March 7 , 2026
4 days
63
- கார நீர்ப்பகுப்பு என்றும் அழைக்கப்படும் நீர் தகனத்தைச் சட்டப்பூர்வமாக்கிய ஐக்கியப் பேரரசில் முதல் நாடாக ஸ்காட்லாந்து ஆனது.
- நீர் தகனம் என்பது பாரம்பரிய அடக்கம் மற்றும் நெருப்பு மூலமான தகனத்திற்கு மாற்றான சுற்றுச்சூழலுக்கு உகந்த மாற்றாகும்.
- இந்தச் செயல்முறையானது, மூடிய அறையில் நீர், வெப்பம் மற்றும் பொட்டாசியம் ஹைட்ராக்சைடு ஆகியவற்றைப் பயன்படுத்தி உடலைச் சிதைக்கின்றது.
- இதற்கு சுமார் 90 நிமிடங்கள் எடுக்கும், எலும்புகள் மட்டுமே எஞ்சியிருக்கும், பின்னர் அவை சாம்பலாக மாறும்.
- இந்த முறை குறைவான கார்பன் உமிழ்வை உருவாக்குகிறது மற்றும் நெருப்பு மூலமான தகனத்துடன் ஒப்பிடும் போது குறைந்த ஆற்றலைப் பயன்படுத்துகிறது.
- சுற்றுச்சூழலுக்கு உகந்த நிலையான இறுதிச் சடங்கு விருப்பங்களை வழங்க ஸ்காட்லாந்து பாராளுமன்றத்தால் இந்த சட்டம் அங்கீகரிக்கப்பட்டது.
Post Views:
63