நிதி ஆயோக் அமைப்பானது, உயர் இலட்சியமிக்கத் தொகுதிகளில் நீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
மனிதர்கள், கால்நடைகள், வேளாண்மை மற்றும் தொழில்துறைக்கான நீர் தேவையை மதிப்பிடுவதற்கு நீர் வளம் சார்ந்த மதிப்பீட்டு அறிக்கை ஒரு கட்டமைக்கப்பட்ட அணுகுமுறையை வழங்குகிறது.
இந்த மதிப்பீடு ஆனது 11 மாநிலங்கள் மற்றும் 8 வேளாண்-பருவநிலை மண்டலங்களில் உள்ள 18 இலட்சியமிக்க தொகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது.
இணைய அடிப்படையிலான தளமான வருணி, தொகுதி அளவிலான நீர்ப் பாதுகாப்பு திட்டமிடல் மற்றும் ஒருங்கிணைந்த நீர் மேலாண்மையை ஆதரிக்கிறது.
குடிநீர் நிலைத்தன்மையை மேம்படுத்துவதற்கும் அதன் சமமான விநியோகத்தை உறுதி செய்வதற்கும் தனிப் பயனாக்கப்பட்டப் பரிந்துரைகளை இந்த அறிக்கை வழங்குகிறது.