TNPSC Thervupettagam

நதிநீர் தீர்ப்பாயங்களின் கால நீட்டிப்பு

June 22 , 2026 16 days 122 0
  • 2026 ஆம் ஆண்டு ஜூன் 15 அன்று வெளியிடப்பட்ட அரசிதழ் அறிவிப்புகள் மூலம் ரவி மற்றும் பியாஸ் நதிநீர் தீர்ப்பாயம் மற்றும் கிருஷ்ணா நதிநீர் தகராறு தீர்ப்பாயம் ஆகியவற்றின் பதவிக்காலத்தை மத்திய அரசு ஒரு வருடம் நீட்டித்துள்ளது.
  • மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறுகளைத் தீர்ப்பதற்காக 1956 ஆம் ஆண்டின் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறுகள் சட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு இடையிலான நதிநீர் தகராறு தீர்ப்பாயங்கள் அமைக்கப்படுகின்றன.
  • 1986 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட ரவி மற்றும் பியாஸ் நதிநீர் தீர்ப்பாயம் பஞ்சாப், ஹரியானா மற்றும் ராஜஸ்தான் இடையேயான நதிநீர்ப் பகிர்வு தகராறுகளை விசாரிக்கிறது.
  • 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் அமைக்கப்பட்ட கிருஷ்ணா நதிநீர் விவாத தீர்ப்பாயம் (KWDT-II) ஆந்திரப் பிரதேசம், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் தெலுங்கானா இடையேயான நதிநீர் பகிர்வு தகராறுகளைக் கையாள்கிறது.
  • இந்திய அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையில் உள்ள மாநிலப் பட்டியலின் பதிவு 17-இன் கீழ் நீரானது மாநிலப் பட்டியலில் அடங்கும்.
  • சட்லஜ்-யமுனா இணைப்பு (SYL) கால்வாய் தகராறு என்பது பஞ்சாப் மற்றும் ஹரியானா இடையே ரவி-பியாஸ் நதிநீரைப் பகிர்ந்துகொள்வதோடு தொடர்பு உடையதாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்