நீலகிரி லில்லியின் வளங்காப்பிற்கு உதவும் வகையில் நீலகிரியின் 'மாவட்ட மலர்' ஆக அதனை அறிவிக்க சூழலியல் வல்லுநர்கள் மற்றும் தாவரவியலாளர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீலகிரி லில்லி (லிலியம் வாலிச்சியானம் வர். நீல்கெரென்ஸ்) ஆனது நீலகிரி மற்றும் பழனி மலைகளில் மட்டுமே காணப்படுகிறது.
இது உயரமான புல்வெளிகளில் ஆகஸ்ட் மாத இறுதியில் மூன்று வாரங்கள் மட்டுமே பூக்கும்.
மேய்ச்சல், அயல் இனங்கள் மற்றும் பருவநிலை மாற்றம் காரணமாக அதன் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
விழிப்புணர்வு மற்றும் பாதுகாப்பை அதிகரிக்க நீலகிரியின் மாவட்ட மலராக அதனை அறிவிக்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
முன்னதாக மணிப்பூர் அதன் வளங்காப்பிற்காக ஷிருய் லில்லியை அதன் மாநில மலராக அறிவித்தது.